Main Menu

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்திற்கும் வரி உயர்வு – அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களில் கிட்டத்தட்ட அனைத்திற்கும் வரியை உயர்த்த உத்தரவிட்டுள்ளார்.

200 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சீன இறக்குமதிகளுக்கு வரி உயர்த்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவர் அவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவும், சீனாவும் வாஷிங்டனில் 2 நாள் வர்த்தகப் பேச்சை நிறைவுசெய்துள்ள வேளையில் புதிய உத்தரவு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இருதரப்புமே பேச்சு ஆக்ககரமாக அமைந்ததாகக் கூறின.

வர்த்தகப் பேச்சு இனியும் தொடரும் என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ள வேளையில், அண்மை வர்த்தகப் பேச்சு ஓரளவு நன்றாக நடைபெற்றதாக சீனத் துணைப் பிரதமர் கூறினார்.