சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக சரிவு

சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2ஆவது மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம், கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
குழந்தைப் பராமரிப்பு , கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை போன்றவைகளே குழந்தைகள் பெற்றுக் கொள்வதைத் தவிர்ப்பதற்கான காரணம் என மக்கள் தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.