சீனாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியது – அமெரிக்க அதிகாரிகள் தகவல்
சீனாவின் அணுசக்தியில் இயங்கும் புதிய தாக்குதல் நீர்மூழ்கி அந்த நாட்டின் துறைமுகத்தில் தரித்துநின்றவேளை கடலில் மூழ்கியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே ஜூன் மாதத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர்துறைமுகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதுஎன தெரிவித்துள்ளார்.
புதிய அணுசக்தி தாக்குதல் எதன்காரணமாக மூழ்கியது என்பது தெரியவில்லை மூழ்கிய வேளை அதில் அணுஎரிபொருள் காணப்பட்டதா என்பதும் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
தனது நீர்மூழ்கி மூழ்கியதை சீன கடற்படை மறைக்க முயன்றுள்ளமை ஆச்சரியமளி;க்கவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி நீர்மூழ்கி மூழ்கியமை பயிற்சி மற்றும் உபகரணங்களின் தரம் பற்றிய வெளிப்படையான கேள்விகளிற்கு அப்பால் இந்த சம்பவம் சீன இராணுவம் அந்த நாட்டின் பாதுகாப்பு துறையை எவ்வாறு கண்காணிக்கின்றதுஎன்பது குறித்தும் பொறுப்புக்கூறல் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது என தெரிவித்துள்ளார்.
எனினும் இது குறித்து வழங்குவதற்கு எந்த தகவலும் இல்லை அமெரிக்காவிற்கான சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தனது இராணுவவல்லமையை விஸ்தரிக்க முயலும் சீனாவிற்கு பெரும் அவமானம் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
சீன உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதனிடம் 370 கப்பல்கள் உள்ளன தற்போது நவீன அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது