சிவாஜி மகன் ராம்குமார் எல்.முருகனுடன் சந்திப்பு
தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை இன்று மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் சந்தித்தார். பா.ஜனதா தலைமையகமான கமலாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
தமிழக பா.ஜனதா தனது பலத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
சமீப காலமாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.
காங்கிரசின் முக்கிய நிர்வாகியாக இருந்த குஷ்பு பா.ஜனதாவில் இணைந்தார். ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரும் பா.ஜனதாவில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், மூத்த நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன் நாளை பா.ஜனதாவில் இணைகிறார். திருவான்மியூரில் நடைபெறும் பா.ஜனதா கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேருகிறார்.
இதுபோல், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரும், அவரது மகனும் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகளுடன் அவர் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை இன்று ராம்குமார் சந்தித்தார். பா.ஜனதா தலைமையகமான கமலாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது.