சிறைச்சாலைக்குள் இருவரை பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த கைதி!
சிறைச்சாலைக்குள் கைதி ஒருவன் இரு நபர்களை பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அலென்ஸ்கோன்-கான்டே-சர்-சார்டே சிறைச்சாலையில்நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இங்கு சிறைவைக்கபட்டுள்ள கைதி ஒருவன் இரவு 7 மணியளவில் இரு நபர்களை பணயக்கைதியாக பிடித்துள்ளான்.
நன்கு அனுபவம் கொண்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவரையும், இளம் சிறைக் கைதி ஒருவரையுமே அவன் பணயக்கைதியாக பிடித்துக்கொண்டான்.
பின்னர், 11:45 மணியளவில் அதிகாரியை விடுவித்துள்ளான். இரண்டாவது நபரை நள்ளிரவு 12:30 மணிக்கு விடுவித்துள்ளான். இந்த சம்வத்துக்குரிய காரணம் குறித்து அறியமுடியவில்லை.
பணயக்கைதிகளை பிடித்த கைதி, விசாரணைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். அவன் முன்னதாகவே பல தடவைகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தவன் எனவும், சிறைச்சாலைக்குள் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கபட்டிருந்தான் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.