சிறுவர்களுக்கு இலவச போக்குவரத்து! – பரிஸ் நகர சபை அறிவிப்பு

பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்பட உள்ளதாக பரிஸ் நகர சபை அறிவித்துள்ளது.
நான்கு தொடக்கம் 11 வயதுடைய மாணவர்களுக்கு பரிசுக்குள் பயணப்பட இலவச பயணச்சிட்டைகளும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இந்த திட்டம் 20 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் புதிய திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இத்தகவலை பரிஸ் நகர சபை அறிவித்துள்ளது. அதேவேளை, உயர்கல்வி மாணவர்களின் மாதாந்த நவிகோ அட்டையில் 50% வீத விலைக்கழிவும் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, 14 தொடக்கம் 18 வரை வயதுடையவர்களுக்கு இலவச Vélib சேவைகளும் வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் 2019 இல் இருந்து இந்த புதிய வசதிகள் நடைமுறையில் இருக்கும். செப்டம்பரில் இருந்து வருட முடிவு வரையான பகுதிக்கு இந்த சேவைகளுக்கு 5 மில்லியன் யூரோக்களும், அதன் பின்னர் வருடத்துக்கு 15 மில்லியன் யூரோக்களும் இந்த திட்டத்தினால் வருவாய் இழப்பு ஏற்படும் என நகர மண்டபம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பை சரிசெய்ய பரிஸ் நகர சபை வேறு சில திட்டங்களை 2020 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !