சிறுமியின் பெயரை கேலி செய்த பணியாளர்- மன்னிப்பு கோரிய விமான நிறுவனம்!

அமெரிக்காவில் உள்ளக விமானத்தில் பயணம் செய்த ஐந்து வயது சிறுமியின் பெயரை கேலி செய்த பணியாளரின் செயலுக்காக சவுத்வெஸ்ட் எயார்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

ட்ரஸி ரெட்போர்ட் (Traci Redford) என்பவரும் அவரது மகள் ஏபிசிடி-யும் (Abcde (pronounced ab-si-dee) அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாசுக்கு செல்லும் விமானத்தில் நேற்று (வியாழக்கிழமை) பயணிக்க சென்றனர்.

அப்போது, விமான நிலையத்தில் சிறுமியின் பயணச் சீட்டை பரிசோதித்த பணியாளர், அவரது பெயரை பார்த்து நகைத்ததோடு, அதை ஔிப்படமெடுத்து சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், விமான நிலைய பணியாளரின் செயலுக்கு மன்னிப்பு கோருவதாக சவுத்வெஸ்ட் எயார்லைன்ஸின் செய்தித்தொடர்பாளர் கிறிஸ் மெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !