Main Menu

சிறுபான்மையின மக்கள் தங்களின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள ஒற்றுமையாக செயற்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்

சிறுபான்மையின மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் தங்களின்  இருப்பை பாதுகாத்துக்கொள்ள முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “நடைபெறவுள்ள தேர்தல்  சிறுபான்மையின மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும்.

மேலும் எமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனின்  சிறுபான்மையின மக்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் சஜித் பிரேமதாச தலைமையிலான அணிக்கு வாக்களித்தால் மாத்திரமே ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொள்ளகூடியதாக இருக்கும்.

எனவே, தொலைபேசிக்கு வாக்களித்துவிட்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...