சிறுநீரகம் பாதிப்படைந்த முன்னாள் போராளி வவுனியாவில் மரணம்

வவுனியா ஓமந்தைப்பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் யாழ் பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஓமந்தை மாதர்பனிக்கர்குளம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளியான இராசையா இராசகுமாரன் 42வயதுடைய 6பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப்பலனின்றி கடந்த 20ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து நேற்று சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்டு நேற்று பிற்பகல் 2.30மணியளவில் இறுதிக்கிரியைகள் ஓமந்தை, மாதர்பனிக்கர்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த சில வருடங்களாக சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !