சிறிலங்காவில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டிவைத்துள்ளார் – பென் எமர்சன்!

சிறிலங்காவில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டிவைத்துள்ளார் என சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐநா நிபுணர் பென் எமர்சன் குற்றம்சுமத்தியுள்ளார்.

அவர் தனது சிறிலங்காப் பயணத்தின் முடிவில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.

மேலும்அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா நீதித்துறையின் கரங்கள் சட்டமா அதிபர் மூலமாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது.

எந்தவொரு பிணைமனுவையும் சட்டமா அதிபர் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராகக் காணப்படுகின்றார் எனவும் இந்த நடைமுறை சிறிலங்காவில் தற்போதும் இருந்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !