சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா
சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இன்று காலை அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
“கொழும்பிலும் மட்டக்களப்பிலும் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது.” என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உதவிகள் மற்றும் விளக்கங்கள் தேவைப்படும், இந்தியக் குடிமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.