சிரியா மீதான தாக்குதல்: ஸ்திரமற்ற நிலைப்பாட்டில் ஜேர்மன்

சிரியாவின் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்கா தலைமையிலான முயற்சியில் பங்குபற்றுவதில்லை என ஜேர்மன் தீர்மானித்துள்ள போதிலும், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது உள்ளதாக சர்வதேச ஆய்வுகளுக்கான நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.

சிரியா மீதான தாக்குதல்கள் தொடர்பாக ஜேர்மன், விருப்பும் வெறுப்பும் கலந்த நிலைப்பாட்டில் காணப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரியாவின் டூமா நகரில் பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது.

அதன்படி அமெரிக்காவின் தலைமையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் ஆதரவுடன் கடந்த 14ஆம் திகதி சிரியாவை இலக்கு வைத்து தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, தொடர்ந்து சிரியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து, உலக நாடுகளின் ஆதரவை கோரியுள்ள நிலையிலேயே ஜேர்மன் இவ்வாறு தளம்பலான நிலைப்பாட்டிலுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !