சிரியாவில் தாக்குதல்: துருக்கி வரவேற்பு

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலை வரவேற்றுள்ள துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், இந்தத் தாக்குதலானது சிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாத்துக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிரியாவில் இடம்பெற்றுள்ள படுகொலைச் சம்பவங்களுக்கு பதிலளிக்காமல் இருக்கக்கூடாதென்ற செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

அப்பாவிப் பொதுமக்கள் மீதான சிரியாவின் ரசாயனத் தாக்குதலைக் கண்டித்து சிரியாவில் நேற்று (சனிக்கிழமை) அமெரிக்கா தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தத் தாக்குதலுக்கு பிரான்ஸும் பிரித்தானியாவும் ஆதரவளித்துள்ளன. இந்நிலையிலேயே, துருக்கிய ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !