Main Menu

சியாரா புயல் காரணமாக ஜேர்மனியில் 180 விமான சேவைகள் இரத்து!

ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் சியாரா புயல் காரணமாக ஜேர்மனியில் 180 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் வடக்குப்பகுதிகளில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் வீதி மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று மோசமான வானிலை காரணமாக ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் 180 விமானங்களின் புறப்பாடு, வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹாம்பர்க், பெர்லின் உள்ளிட்ட இடங்களிலும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.