சியரா லியோனில் அவசரகால நிலை பிரகடனம்

சியரா லியோனில் தொடரும் வன்முறைகள் காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சியரா லியோனில் கடந்த வருடத்தில் மாத்திரம் 8,500-இற்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸாரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நிலவும் பதற்றமான சூழலை கருத்திற்கொண்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ (Julius Maada Bio) அறிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களின் குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய சட்டத்தின் பிரகாரம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பலருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இதற்கு அந்நாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !