சிம்புவுக்காக அரசியலை விட்டு காதல் படமெடுக்கும் டி.ராஜேந்தர்

அரசியல் சார்ந்த படம் ஒன்றை எடுக்கவிருந்த நிலையில், மகன் சிம்புவுக்காக அதை கைவிட்டு காதல் கதை சார்ந்த புதிய படம் ஒன்றை இயக்குகிறார் நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர்.  தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகம்சார் பணிகளை ஆற்றி சாதனை படைத்தவர் நடிகர் டி.ராஜேந்தர். தனது அடுத்த படமான ’இன்றையக் காதல்டா’ படத்தின் விபரத்தை நேற்று வெளியிட்டுள்ளார்.

அரசியல் நகைச்சுவை தொடர்பான திரைப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் முழு நீள காதல் படத்தை இயக்குவது ஏன்? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர்.

‘முதலில் முழுநீள அரசியல் நகைச்சுவை படம்தான் எடுக்க திட்டமிட்டேன். இந்த தகவல் அறிந்த என் மகன் சிம்பு என்னிடம் உங்களது பலமே காதல் கதை தான்.காதல் படங்கள் தான் உங்கள் முத்திரை. நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே தான் நான் அரசியலை விட்டு காதலை படமாக்குகிறேன். வீராசாமி படத்தை கிண்டலடித்தார்கள். எனவே இதில் சென்டிமென்ட் அதிகம் இருக்காது’ என்று குறிப்பிட்டார்.இன்றையக் காதல்டா படத்தில் டி.ராஜேந்தருக்கு வில்லியாக வேடத்தில் நமீதா நடிக்கிறார். அவருக்கு கணவராக நடிக்க ஒரு கதாநாயகனை அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !