சிம்பாப்வேயில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 47 பேர் பலி

சிம்பாப்வேயில் எதிர் எதிரே வந்த 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றறுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !