சிட்னியின் அடுக்குமாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து

சிட்னியின் CBD இல் Macquarie வீதியில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின் வெளிப்புறத்தில் கட்டுமானப் பணிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சாரத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை தீப்பிடித்து கட்டடத்தின் கூரையில் பரவியது

இத்தீவிபத்தில் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் கட்டடத்தினுள் இருந்த 20 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் எனவும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் Macquarie வீதியின் விபத்து ஏற்பட்டபகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !