சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா?

அறுவைசிகிச்சைமூலம் குழந்தையை பிறக்க வைத்து விட்டு அவர்களின் எதிர்காலத்திற்கான ஜாதகத்தை முன்னதாக கணிக்கின்றனர். இது சரியான பிறப்பாக அமையாது.

ஏனெனில் இயற்கையின் நியதியை மீறி மனிதனால் செய்யப்படும் எந்தவொரு செயல்பாடுகளுமே சரியானது அல்ல என்று ஜோதிட சாஸ்திரங்கள் மற்றும் புராணங்கள் கூறுகிறது.

எனவே செயற்கையாக நாம் தீர்மானிக்கும் ஒரு மனிதனின் பிறப்புக்கும் அதனை வைத்து செய்யப்படும் ஜாதகக் கணிப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது உண்மையானது.

ஒரு குழந்தையானது எப்போது எந்நாளில், எத்தனை மணி, நிமிடம், விநாடிகளில் பிறக்க வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோல் தான் ஒருவருடைய இறப்பு பற்றியும் நமக்கு தெரியாது.

பிறப்பு என்பது அவரவர் பூர்வஜென்ம வினைகளுக்கான சம்பாவனை. அதனை ஒவ்வொரு கால கட்டங்களிலும் இன்பம், துன்பமாக அனுபவித்தே தீரவேண்டும் என்பது ஒவ்வொருவரின் விதியாகும்.

எனவே அதனை நாம் நல்லநேரம், கிரகநிலை பார்த்து, சிசேரியன் செய்து பூமியில் பிறக்க வைப்பதன் மூலம் நம்மால் அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட முடியாது என்று ஜோதிட மேதைகள் கூறியுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !