Main Menu

சாம்பியன் லீக் : பிரான்ஸ் vs ஜேர்மன் ஞாயிற்றுக்கிழமை மோதல்

வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள சாம்பியன் லீக் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் ஜேர்மன் அணிகள் மோதுகின்றன.  நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இரண்டவது அரை இறுதி போட்டியில் , Bayern Munich மற்றும் Lyon அணிகள் மோதின. இறுதி போட்டிக்கு நுழையும் அணியை தேர்வு செய்யும் இந்த பலப்பரீட்சையில் ஜேர்மனியின் Bayern Munich அணி 3-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போர்த்துக்கலின்  Lisbon நகரில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது.  முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற முதலாவது அரை இறுதியில் மற்றுமொரு ஜேர்மன் அணியான RB Leipzig அணியினை 3-0 எனும் கணகில் தோற்கடித்து PSG அணி இறுப்போட்டிக்குள் நுழைந்தது.  அதைத் தொடர்ந்து, வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள  இறுதிப்போட்டியில் PSG அணியுடன் Bayern Munich அணி மோதுகின்றது.  சாம்பியனை தேர்தெடுக்கும் பரபரப்பான இந்த ஆட்டம் போர்த்துக்கல்லின் Lisbon நகரில் உள்ள Estadio da Luz மைதானத்தில் இடம்பெற உள்ளது.