சாம்பியன்ஸ் லீக்: 100 கோல்களைப் போட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 100 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் பேயார்ன் மியுனிக் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டினார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி ரியல் மெட்ரிட் மற்றும் பேயார்ன் மியுனிக் அணிகளுக்கு இடையில் நேற்று (12) நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றது.

போட்டியின் 47 ஆவது மற்றும் 77 ஆவது நிமிடங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 02 கோல்களைப் போட்டு ரியல் மெட்ரிட் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவில் 77 ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட கோல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் அவரால் பெறப்பட்ட 100 ஆவது கோலாகும்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 143 போட்டிகளில் கலந்துகொண்டு 100 கோல்களைப் போட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 100 கோல்களைப் போட்டுள்ள முதலாவது வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பதும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !