சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்குமாறு பிரித்தானியாவுக்கு உத்தரவு!

இந்திய பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் பிரித்தானியாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக 1965 இல் சாகோஸ் தீவுகளை பிரித்தானியாவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தாம் தள்ளப்பட்டதாக மொரிஷியஸ் தெரிவித்துள்ளது.

1960 மற்றும் 1970 களில் சாகோஸ் தீவுகளிலிருந்து மக்களை வெளியேற்றிய பிரித்தானியா அவ்விடத்தில் இராணுவத்தளமொன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கியது.

சாகோஸ் தீவுகள் மொரிஷியஸின் முன்னாள் குடியேற்றங்களிலிருந்து சட்டபூர்வமான முறையில் பிரிக்கப்படவில்லையெனவும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் சாகோஸ் தீவுகள் மீதான பிரித்தானியாவின் கட்டுப்பாடுகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !