Main Menu

சஹ்ரான் ஹாசிமிற்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக இருந்தது – முன்னாள் புலனாய்வு அதிகாரி

தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது சகாக்களுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருந்தது என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வாக்குமூலம் வழங்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சஹ்ரானும் அவரது சகாக்களும் பலமுறை இந்தியாவுக்குச் சென்றதாகவும், தாக்குதல்களுக்கு முன்னர் அங்கேயே தங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஏப்ரல் நான்காம் திகதி வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்த தகவலில், சஹ்ரான் குழுவினர் தாக்குதலுக்கு தயாராகியுள்ளனர் என தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சஹ்ரானின் குழுவினரால் ஆயுதங்கள் சேகரிப்பது குறித்து தகவல் பெறவில்லை என்றும், நுவரெலியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் முஸ்லிம்களின் ஒரு குழுவுக்கு சஹ்ரான் ஆயுதப் பயிற்சி அளித்ததாக தகவல் கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.