Main Menu

சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் ரியாத் தலைநகர் உட்பட பல நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, தபுக், தம்மாம், டஹரன், அல்-ஹொஃபுல், ஜேடா, தாயிஃப், அல்-கடீஃப், அல்-கொபார் ஆகிய நகரங்களில் மேற்படி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நகரங்களுக்குள் நுழைவதும் வெளியேறுவதும் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளதோடு குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதாகவும் சவூதி அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பகிரவும்...
0Shares