சவுதி மன்னரின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிர்ப்பு

சவுதி அரேபியாவின் முடிக்குரிய மன்னர் முஹம்மட் பின் சல்மானின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பரிஸில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்தபோது, பிரான்ஸிலுள்ள யேமன் உரிமைக் குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தலைநகர் பரிஸிலுள்ள ஈபெல் கோபுரத்துக்கு அருகில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய சுமார் 20 பேர், சல்மானின் பிரான்ஸ் விஜயம் மற்றும் யேமனில் சவுதி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மோதலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், யேமனில் இடம்பெற்ற மோதல் காரணமாக 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதுடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறியுள்ளனர்.

மேலும், பிரான்ஸுக்கு விஜயம் செய்துள்ள சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதுடன், இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவது மற்றும் பொது விடயங்கள் தொடர்பாகவும் கவனஞ்செலுத்தவுள்ளதாகவும், சர்வதேச ஊடகமொன்று கூறியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !