சவுதி-பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு

கட்டாருக்கும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் இடையே தொடர்ந்துவரும் நெருக்கடியினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-ஈவ்ஸ் லெ ட்ரியன் சவுதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளாா்.

கட்டார் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே இராஜதந்திர பிளவு மற்றும் வர்த்தகத் தடை தொடா்பில் மத்தியஸ்தம் செய்ய உதவுவதற்காக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவிற்கு நேற்று (சனிக்கிழமை) அவர் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளாா்.

இதன்போது சவுதி வெளியுறவு அமைச்சர் அடெல் அல்-ஜுபீருடன் இணைந்து நடத்திய கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லெ ட்ரிரியன், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC)க்குள் ஒற்றுமைக்காகவும், வளைகுடா நாடுகளில் ஒரு தீர்வுக்காகவும் அழைப்பு விடுத்தார்.

மேலும், பேச்சுவார்த்தைகளுக்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு தாங்கள் அழுத்தம் கொடுப்போம் எனவும் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் பரஸ்பர நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !