சவுதியின் இளம் புகலிடக் கோரியாளரின் வழக்கை தீர்மானிக்க காலக்கெடு இல்லை – அவுஸ்ரேலியா

தாய்லாந்து விமான நிலையத்தில் வைத்து குடும்பத்தை விட்டு தப்பி வந்து அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையை பெறும் நோக்கில் அங்கு சென்ற இளம் பெண் தொடர்பான வழக்கை விசாரிக்க காலக்கெடு எதுவும் இல்லை என்று அவுஸ்ரேலிய வௌிவிவகார அமைச்சர் மாரிஸ் பைனே தெரிவித்துள்ளார்.

சவுதி பெண்மணியான ரஹஃப் மொஹம்மட் அல்-ஹூனன் என்பவர் மிக அச்சத்துடன் இருப்பதாகவும், மதம் மாறியதன் காரணமாக தனது குடும்பத்தினர் தன்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறினார்.

ஐ.நா, அகதிகள் மீள்குடியேற்றத்திற்கான முகவரகத்தின் கருத்தின்படி, ஹூனான்னை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி வைத்து அங்கு குடியுரிமை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெங்கொக்கில் வைத்து அவர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளதுடன், ஹூனான் அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட பயணத்தையே அவர் தற்போது மேற்கொண்டுள்ளார்.

ஹூனன் தற்போது யூ.என்.எச்.சீ.ஆரின் பாதுகாப்பில் பெங்கொக் விருந்தகமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !