சவுதிக்கான ஆயுத ஏற்றுமதி தடை நீடிப்பு: ஜேர்மன் அரசாங்கம் அறிவிப்பு

சவுதி அரேபியாவிற்கான ஆயுத ஏற்றுமதிக்கான ஒருதலைப்பட்ச நிறுத்தத்தை இம்மாத இறுதிவரை நீடிக்கவுள்ளதாக ஜேர்மன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஆயுத தடை மார்ச் 9ஆம் திகதியுடன் நீக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தடை நீடிப்பு குறித்த அறிவிப்பை ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் வெளியிட்டுள்ளார்.

டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சருடன் நேற்று நேற்று (புதன்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சவுதி அரேபிய கூட்டணி படைகளின் ஆதரவுடன் யேமனில் இடம்பெற்றுவரும் போரை அடிப்படையாகக் கொண்டே ஜேர்மன் அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

யேமன் போர் முடிந்தளவு விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதனாலேயே ஆயுத ஏற்றுமதியை நிறுத்த தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !