வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் முயற்சி! – காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு
பரிசின் புறநகர் பகுதி ஒன்றில் தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. Villejuif நகரில் இன்று வெள்ளிக்கிழமை 14:00 மணி அளவில் இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் வீதியில் சென்ற நபர்களை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாக்குதலாளியை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை Villejuif நகரில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Villejuif நகரின் Parc des Bruyères பகுதியில், 2 மணி அளவில் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். கையில் கூரான கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். 17 எனும் அவரச இலக்கத்துக்கு தொடர்புகொண்ட சிலர் காவல்துறையினரை அழைத்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் சம்பவ இடத்துக்கு துரிதமாக வந்துள்ளனர். Bruyères பூங்காவில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குறித்த ஆயுததாரியை சரணடையும் படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி அவர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்த முற்பட, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
மூன்று தடவைகள் துப்பாக்கியால் சுட்டு, குறித்த நபரை வீழ்த்தியுள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் மாநில செயலாளர் Laurent Nunez, 3:30 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தார். ஆயுதாரி மூவரை கத்தியால் தாக்கி காயமேற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.