சற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இளைஞன் இன்று சடலமாக மீட்புவவுனியா கல்நாட்டினகுளம் பகுதியிலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா சிதம்பரபுரம் கல்நாட்டினகுளம் பகுதியில் வசித்து வந்த சிவலிங்கம் நிரோசன் வயது 24 நேற்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடிய இளைஞனே இன்று காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இளைஞனின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.