சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டம்-காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அழைப்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர் “எதிர்வரும் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அத்தினத்தில் வடக்கு கிழக்கில் எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
அந்த வகையில் வடமாகாணத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து பழைய பஸ் நிலையம் வந்தடைந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்
அதே போல் கிழக்கு மாகாணத்தின் கல்லடிப் பாளத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து காந்திப் பூங்கா வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்
எனவே இப்போராட்டத்திற்கு அரசியற் பிரமுகர்கள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் வலுச்சேர்த்து எங்களுடன் ஒன்றிணைய வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். .