Main Menu

சர்வதேச பொருளாதார மாநாடு சுவிஸில் ஆரம்பம்

சர்வதேச பொருளாதார மாநாடு சுவிஸ்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டில், சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இம்மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ், ஜேர்மன் ஜனாதிபதி மெர்கல், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின், தலைமை நிர்வாக அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

அத்தோடு பொலிவுட் நடிகை தீபிகா படுகோனே, மனநிலை ஆரோக்கியம் தொடர்பாக இங்கு உரையாற்றவுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.