Main Menu

சர்வதேச பாரம்பரிய தினத்திற்கான சிறப்புக்கவி “ பாரம்பரியங்கள் “

வரலாற்றில் இன்று சிறப்புநாள்
வாழ்வியல் தடத்தோடு பின்னிப் பிணைந்த நாள்
கலை கலாச்சாரங்களைக் போற்றிடும்நாள்
விழுமியங்களைப் பாதுகாக்கும்நாள்
இயற்கை வளங்களைப் பேணிடும் நாள்
பாரம்பரியங்களைக் கட்டிக் காத்திடும் நாள் !

நாட்டினைப் பெருமைப்படுத்த
நாட்டிற்கு அழகு சேர்க்க
விழிப்புணர்வோடு செயற்பட
சித்திரைத் திங்கள் பதினெட்டினை
சிந்தையில் நிறுத்தி
ஐ.நா.வும் ஆக்கியதே
சர்வதேச பாரம்பரிய தினமாக இன்று !

நாட்டின் நாகரீகத்தை
பறைசாற்றி நிற்பது பாரம்பரியமே
உலக நாடுகள் ஒவ்வொன்றும்
தமக்கென பாரம்பரியங்களை
தனித்துவமாகவே வைத்து
இயற்கை எழிலினை பாதுகாக்கின்றனவே !

ஆறுகள் மலைகள் நதிகள் கடல்கள்
அனைத்தும் இயற்கையின் கொடையே
இயற்கையோடு இணைந்ததே மனித வாழ்வு
இயற்கை வளங்களைப் பாதுகாத்து
விழிப்புணர்வோடு செயற்பட்டு
பாரம்பரியங்களை காத்திடுவோம் !

இயற்கையின் எழில் மிக்க இடங்கள்
இரசிக்கும் படியான ஓவியங்கள்
எண்ணற்ற வண்ணச் சிற்பங்கள்
குகை ஓவியங்கள் குடைவரைக் கோவில்கள்
உயர்ந்த கோபுரங்கள் பெருஞ்சுவர்கள்
கொலோசியங்கள் தொங்கு பாலங்கள்
பறவைகள் விலங்குகளின் சரணாலயங்கள்
பாரம்பரியத்தினை புடம் போட்டுக் காட்டுகின்றதுவே !

பாரம்பரியங்களை உலக அதிசயங்களாக்கி
ஏழு அதிசயங்களை மகத்துவமாக்கி
உல்லாசப் பிரயாணிகளையும் கவர்ந்து
பாரம்பரியங்களைப் பேணி
உலக வரலாற்றில்
முத்திரை பதிக்கிறது ஐ..நா..வும் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 18,04,2019

பகிரவும்...
0Shares