சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் அண்மையில் வொஷிங்டன் பயணமானார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், முற்போக்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !