சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுகிறது பிலிப்பைன்ஸ்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற பிலிப்பைன்ஸ் முடிவெடுத்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் தொடர்பாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்ட்டே மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தத் தொடங்கியதை அடுத்து, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் ஒத்துழைக்காதென ஜனாதிபதி டுட்டார்ட்டே முன்னதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்திலிருந்து விலகும் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கிரஸினர் மூவர் உட்பட 46 அரச தரப்பினர் மீது ஜனாதிபதி டுட்டார்ட்டே போதை பொருளுடன் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக கடந்த வாரம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !