சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்

முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இத்தொடரில் நேற்று இரசிகர்களை மகிழ்வித்த நான்கு முக்கிய போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்…

வெம்ப்லே விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், டோட்டன்ஹாம் அணியும், இண்டர் மிலான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டோட்டன்ஹாம்  அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் போது, டோட்டன்ஹாம் அணியின் வீரரான கிறிஸ்டியன் எரிக்ஸன் 80ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

பிலிப் விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், பார்சிலோனா அணியும், பி.எஸ்.வி. என்தோவன் அணியும் மோதிக் கொண்டன.

இரசிகர்களுக்கு உச்சக்கட்ட பரபரப்பை கொடுத்த இப்போட்டியில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் பார்சிலோனா அணி சார்பில், அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, 61ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஜெராட் பிகே, 70ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார்.

பி.எஸ்.வி. என்தோவன் அணி சார்பில், லுக் டி ஜொங், 82ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதற்கமைய பார்சிலோனா அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

சென் பாலோ  விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், நெப்போலி அணியும், ரெட் ஸ்டார் பெல்கிரேட்  அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இரசிர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், நெப்போலி அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

நெப்போலி  அணி சார்பில், மரேக் ஹம்சிக், 11ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ட்ரைஸ் மெர்டன்ஸ்  33ஆவது மற்றும் 52ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார்.

ரெட் ஸ்டார் பெல்கிரேட்  அணி சார்பில், எல் பார்டு மொஹமட் பென் நஃபிஹானி 57ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதற்கமைய நெப்போலி அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

பார்க் டெஸ் பிரின்செஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியும், லிவர்பூல் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் சார்பில், ஜுவான் பர்னாட்  13ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். நட்சத்திர வீரரான நெய்மர் 37ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

லிவர்பூல் அணி சார்பில், ஜேம்ஸ் மில்னர்  46ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !