Main Menu

சம்பிக்க ரணவக்கவுக்கு முன்பிணை

விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு நாளை (வியாழக்கிழமை) பரிசீலிக்கப்படவிருந்தது.

ஆனாலும் நாளை நடைபெறவுள்ள ஒன்பதாவது  நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு காரணமாக, சம்பிக்க ரணவக்க பிரேரணையை தாக்கல் செய்து, இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.

இதன்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க அவருக்கு முன்பிணை வழங்கியதுடன், வழக்கு தொடர்பான விசாரணையை ஒகஸ்ட் 28 ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியதாகவே சம்பிக்க ரணவக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.