சமூக ஊடகங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை நீக்கம்?

சமூக ஊடகங்கள் தொடர்பில் இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்த தகவலை இன்றைய தினம் அறிவித்துள்ளார்.

முகநூல், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது இவ்வாறு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அரசாங்கம் சமூக ஊடகங்கள் மீது தடை விதித்திருந்தது. மதவாத, இனவாத, குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான பதிவுகளை முகநூலில் பில்டர் செய்வது தொடர்பில் முகநூல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !