சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசித்த பெண்களின் வீடுகள் மீது தாக்குதல்!

சபரிமலையில் இன்று (புதன்கிழமை) ஐயப்பனை தரிசித்த இரு பெண்களின் வீடுகள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமேற்பட்டுள்ளது.

40 வயதிற்குட்பட்ட பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று அதிகாலை பொலிஸ் பாதுகாப்புடன் ஆலய தரிசனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, மர்ம நபர்கள் சிலர் பிந்து, கனகதுர்கா ஆகியோரின் வீடுகளின் முன் மர்ம நபர்கள் சிலர்திரண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக கோஷமிட்டபடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். சிலர் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமேற்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக்கக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள்  இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களில் பிந்து கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டியை சேர்ந்தவர் என்றும்,  ஏற்கனவே இவர் சபரிமலை சென்றபோது இவரது வீடு மீது ஐயப்பபக்தர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுபோல மலப்புரம் அங்காடிபுரத்தை சேர்ந்த கனகதுர்காவின் வீடுமீதும் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் இவர்கள் இருவரும் மீண்டும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !