சந்திரிக்கா பிரித்தானியா பயணம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சந்திரிக்கா இங்கிலாந்திற்கு அவசரமாக பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அடைந்த படு தோல்வி, சந்திரிக்காவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியீட்டியதுடன் இரண்டாம் இடம் ஐக்கிய தேசியக் கட்சியினால் கைப்பற்றிக்கொள்ள்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !