சத்தீஸ்கரில் பேருந்தில் குண்டுவெடிப்பு – மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. எனவே, பாதுகாப்பு படையினரை குறிவைத்து மாவோயிஸ்டுகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தண்டேவாடா மாவட்டம் பச்சேலி அருகே ஒரு வளைவில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில் பேருந்தின் பெரும்பகுதி சேதமடைந்து, அதில் பயணம் செய்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்து உயிருக்கு போராடினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பொதுமக்கள் மற்றும் ஒரு சிஐஎஸ்எப் வீரர் என 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் வரும் 12ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருப்பது பாதுகாப்புக்கு சவால் விடும் வகையில் உள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !