சதிகளை முறியடித்தே ஆட்சியை நடத்துகின்றோம் – முதல்வர்

தமிழகத்தில், சதிகாரர்களின் சதிகளை முறியடித்து ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில், “எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தைக் காக்க ஜெயலலிதா தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். சிறந்த ஆட்சியை செய்தார்.

இன்று ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பலர் சதி செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் இன்று அதனையெல்லாம் முறியடித்து ஆட்சியை நடத்தி வருகிறோம்.

இந்த இரு தலைவர்களின் வழி நின்று நாம் தொடர்ந்தும் ஆட்சியை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !