சட்ட விரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்கள்
சட்ட விரோதமான முறையில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்களை சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்குள் குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் மட்டுப்படுத்தியிருந்தது.
அவற்றுள் வாகன இறக்குமதி செய்யாமல் இருப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் உள்ள சட்ட திட்டங்களின் அடிப்படையில் குறித்த வாகனங்கள் அரசுடமையாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சுங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.