சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் புதிய நடவடிக்கை

சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க  புதிய வேலைத்திட்டம் ஒன்றினை அவுஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இந்தவகையில் இலங்கையர்களே அதிகளவு சட்டவிரோத குடியேற்றங்களில் அவுஸ்ரேலியாவில் உள்நுழைவதாகவும் அண்மையில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர் சிலரை திருப்பி அனுப்பியதாகவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் ஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

மேலும் இச்செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பயிற்சிகளை விமான சேவையாளர்களுக்கு அவுஸ்ரேலியா வழங்கி வருகின்றது.

இதன் முதற்கட்டமாக விமானங்களிலும் விமான நிலையங்களிலும் இவ்விடயம் தொடர்பாக  சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை  தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !