சட்டவிரோதமாக நாடு திரும்பியபோது கைதானவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து படகு மூலம் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், படகை செலுத்திய இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் மூன்று ஆண்களும் இரண்டு சிறார்களும் அடங்குவதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !