சட்டம் அனைவருக்கும் சமனானது – பிரதமர்!

சட்டம் அனைவருக்கும் சமனானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்கட்சியினரை கைது செய்து சிறையிலடைக்குமாறு நான் பொலிஸாருக்கு உத்தரவிடுவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் தனது உரையில் குறிப்பிட்டார்.

எனினும் எவரையும் கைது செய்து சிறையிலடைக்குமாறோ அல்லது விடுதலை செய்யுமாறோ பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.

நாட்டில் அனைவருக்கும் சட்டம் சமனானது இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்“ என குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !