சட்டமன்ற தேர்தல்! – 511 வேட்பாளர்களை அறிவித்த En Marche கட்சி

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் En marche கட்சி, நேற்று சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களில் 511 பேர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
ஜுன் மாதம் இடம்பெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், முன்னதாக 428 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து François Bayrou இன்  MoDem கட்சியில் இருந்து வேட்பாளர்கள் தெரிவு செய்வதில் பல குழப்பங்கள் நிலவியது. அதன் பின்னர், நேற்று முன்தினம் ‘எங்களுக்கு எவ்வித குழப்பங்களும் இல்லை! அனைத்தும் நன்றாகவே நடக்கும்’ என Oh marche கட்சியின் தற்காலிக தலைவர் Richard Ferrand தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மேலதிகமாக 83 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொகுதியின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. குறித்த இந்த 83 வேட்பாளர்களும் MoDem கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 256 ஆண் வேட்பாளர்களும், 255 பெண் வேட்பாளர்களுமாக மொத்த 511 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !