சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு!

சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் 18 பேரும், சிறையிலுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்கவுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) அங்கு சென்று கலந்துரையாடவுள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் குறித்த 18 பேரும் செல்லவுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியபோது, சசிகலாவை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படுமென குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !