சட்டத்தை மீறும் ஜனாதிபதியின் உறுதி மீளப்பெறப்பட வேண்டும்: சர்வதேச நீதிபதிகள்

மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதியை திரும்பப் பெறுமாறு சர்வதேச நீதிபதிகளின் ஆணையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியுள்ளது.

மேலும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடப்பாடுகளை இலங்கை மீறுவதாக அமையும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் இச்செயற்பாடு நாட்டின் மனித உரிமைகளுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஆணையத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஃப்றெட்றிக் றவ்ஸ்கி எச்சரித்துள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் மரண தண்டனையை எதிர்ப்பதாகவும், இதனை வாழ்வுரிமை மீறலாகவும், மனிதாபிமானமற்ற சீரழிவாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை விதிப்பது உறுதி என கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !