சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்தமைக்காக வழக்கு: ஸ்டாலின் விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அரச சட்டப்பேரவையில் திறந்தமை தொடர்பில் தி.மு.க. தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளதென ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துரைத்த தி.மு.க. செயல்த்தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த ஸ்டாலின், “ உருவப்படம் திறந்தமை தவறு. அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக உருவப்படத்தை திறந்த வைத்துள்ளனர்.

ஊழல்குற்றவாளியென தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவரின் படத்தை சட்டசபையில் வைப்பது சட்டத்திற்கு புறம்பானது.

இதற்கு தி.மு.க. மாத்திரமின்றி காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் தான் மத்திய அரசு சார்பில், அதாவது பா.ஜ.க.வில் இருந்து இந்நிகழ்விற்கு எவரும் வருகைதரவில்லை.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்தில் மாத்திரமின்றி நாடாளுமன்றத்திலும் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். தவறல்ல எனக் கூறியுள்ளார்.

அவர் எவ்வாறு நாடாளுமன்றத்தில் முன்னால் முதல்வரின் படத்தை வைக்கவுள்ளார் என எனக்கு எடுத்துரைக்க சொல்லுங்கள்” இவ்வாறு ஊடகவியலாளரிடம் கருத்துரைத்த ஸ்டாலின் கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !